லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மலையாளியாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் ரகுவரன். ஹீரோ, வில்லன், குணசித்ரம் என எல்லா வகையான நடிப்பிலும் தனக்கென தனி பாணியை கடை பிடித்தவர். நடிகை ரோகினியை திருமணம் செய்து, ஒரு மகனை பெற்று, பின்னர் அவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்தவர்.
ரகுவரனின் வாழ்க்கையை மலையாள சினிமாவின் புகைப்பட கலைஞர் ஹாசிப் அபிதா ஹகீம் என்பவர் டாக்குமெண்டரியாக உருவாக்கி வருகிறார். இதற்கு 'ரகுவரன்: காலத்தை வென்ற கலைஞன்' என்று டைட்டில் வைத்துள்ளனர். ஏ.எச் எண்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. ரகுவரனின் சாயலை கொண்ட அதுல்ஷரே என்பர் ரகுவரனாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில், ரோகிணி எழுத்தாளர் இந்துமதி, நிழல்கள் ரவி, ரகுவரனின் அம்மா, சகோதரர், மகன் ரிஷி ஆகியோர் ரகுவரன் குறித்து பேசி இருக்கிறார்கள். இந்த படத்தில் 60 சதவிகிதம் ரகுவரன் நேரடியாக தோன்றும் இதுவரை வெளிவராத வீடியோ காட்சிகள் இடம்பெறுகிறது. ரஜினியின் பேட்டிக்காக படக்குழு காத்திருக்கிறது. ரஜினி பேட்டி கிடைத்ததும் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.