'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் |
சேரன் இயக்கி, ஹீரோவாக நடித்த கிளாசிக் சூப்பர் ஹிட் படம் 'ஆட்டோகிராப்'. 2004ல் வெளியான இந்த படத்தில் சினேகா, கோபிகா, கனிகா, மல்லிகா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்தனர். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு ஆட்டோகிராப் மாதிரியான பல நினைவுகள் இருக்கும். இந்தப்படம் அப்படி ஒரு படமாக வெளிவந்தது.
இந்தப்படம் வெளியாகி 21 ஆண்டுகளை கடந்த நிலையில் சமீபத்தில் புத்தம் புதிய பொலிவுடன், இந்தக்காலத்திற்கு ஏற்றபடி மெருகேற்றி ரீ-ரீலீஸ் செய்யவதாக அறிவித்தனர். அதேசமயம் படத்தின் வெளியீட்டு தேதியை கூறாமல் இருந்தனர். இப்போது இத்திரைப்படம் வருகின்ற மே16ம் தேதி அன்று தமிழகமெங்கும் ரீ-ரிலீஸ் ஆகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.