''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
ஶ்ரீ லட்சுமி ட்ரீம் பேக்டரி சார்பில் ஆர்.பிரபாகர் ஸ்தபதி தயாரிக்கும் படம் 'கிறிஸ்டினா கதிர்வேலன்'. அறிமுக இயக்குனர் எஸ்.ஜெ.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்குகிறார். 'காலங்களில் அவள் வசந்தம்' கவுஷிக் ராம் நாயகனாக நடிக்க, 'கொண்டல்' மலையாள படத்தின் மூலம் புகழ்பெற்ற பிரதிபா தமிழில் நாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். பிரகத் முனியசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் குறித்து இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன் கூறியதாவது : கும்பகோணம் கல்லூரி பின்னணியில் மதங்கள் கடந்த காதலை மண் மணத்தோடு சொல்லும் படம். கல்லூரியில் உடன் படிக்கும் ஒரு பெண்ணை நாயகன் ஒரு தலையாக காதலிக்க, சக மாணவியான மிகவும் சக்திவாய்ந்த ஒருவரின் தங்கையின் காதலை சேர்த்து வைப்பதற்காக நாயகனும் நாயகியும் இணைய, அது நாயகன்-நாயகியின் வாழ்வையே புரட்டிப்போட அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. என்றார்.