ரீல்ஸ் பிரபலங்கள், ரியலில் திணறுகிறார்கள் : வடிவுக்கரசி ஆதங்கம் | ஜன.,9ல் ரிலீசாகிறது 'ஜனநாயகன்': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | முன்பதிவில் மட்டுமே 58 கோடி வசூலித்த 'எல் 2 எம்புரான்' | கஜினி 2 பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | டியர் ஸ்டூடன்ட்ஸ் படப்பிடிப்பு முடிந்தது | பிரபாஸிற்கு வில்லன் ஆகிறாரா விஜய் சேதுபதி? | ''இந்த மாதிரி படம் எடுங்க.. ஜெயிக்கலாம்'': வெற்றி சூத்திரம் சொன்ன பாக்யராஜ் | 'குபேரா' இயக்குவதில் பெருமை : சேகர் கம்முலா | என் ஹார்ட் டிஸ்கை தாங்க.... : பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா திடீர் போராட்டம் | விஜய்யின் 'ஜனநாயகன்' : முக்கிய அறிவிப்பு |
அண்¬ணன் இயக்¬கு¬னர், கண¬வர் தயா¬ரிப்¬பா¬ள¬ராக இருக்கும் படத்¬தில் நடிப்¬ப¬தன் மூலம் 14 ஆண்¬டு¬க¬ளுக்கு பிறகு மீண்¬டும் தமிழ் திரை¬யு¬ல¬கிற்கு திரும்¬பு¬கி¬றார் பாவனா. 2010களில் தமிழ் திரை ரசி¬கர்¬க¬ளின் உள்¬ளம்¬கவர்ந்து, பார்¬வை¬யாலே பர¬வ¬சம் கொள்ள வைத்த பாவனா தின¬ம¬லர் சண்டே ஸ்பெ¬ஷ¬லுக்கு அளித்த பேட்டி...
14 வரு¬ஷத்¬திற்கு பிறகு 'த டோர்' படத்¬தில் நடித்துள்ளீர்கள்; என்ன ஸ்பெஷல் அப்¬படி
நான் எப்¬படி ரொம்ப வரு¬ஷத்¬துக்கு பிறகு நடிக்க வந்¬தி¬ருக்¬கேனோ அதே போல என் கண¬வர் நவீன் ரொம்ப வருஷத்¬துக்கு அப்¬பு¬றம் ஒரு தமிழ் படம் தயா¬ரிச்¬சி-ருக்¬காரு; என்¬னோட அண்¬ணன் இந்த படத்தை இயக்கி இருக்¬காரு. இது¬தான் 'டோர்' படத்¬தோட ஸ்பெ¬ஷல்.
ரொம்¬ப¬நா¬ளைக்கு பிறகு வருவதால் கண¬வர் படத்திலேயே நடிக்¬க¬லாம்னு முடிவு செய்¬து¬விட்¬டீர்¬களோ
முத¬லில் கன்¬ன¬டத்¬தில் படத்தை ஆரம்¬பிக்¬க¬ணும்னு இருந்¬தோம்; அங்கு பல பிரச்-னை¬கள். அடுத்து கொரோனா. இப்¬படி ஒவ்¬வொரு விஷய¬மாக தள்¬ளிப்¬போ¬னது. தமிழில் புது¬முக ஹீரோ¬யி¬னாக வைத்து சின்ன படம் தயா¬ரிக்¬க¬ யோசித்¬தோம். கடைசி வரை அது அமைய¬வில்லை. பிறகு எல்¬லாரும் என்¬னையே நடிக்க வைக்க முடிவு செய்¬தார்¬கள். 'என்னை யாருக்¬கும் தமி¬ழ¬கத்¬தில் நினைவு இருக்¬காது, நான் சும்மா ஒரு தமிழ் படம் பண்¬றேன்னு சொல்¬லிட்டு இருக்க விரும்¬பல' என்று கூறி மறுத்¬தேன். ஆனால் பாவனா தான் நடிக்க வேண்¬டும் என பல¬தரப்பு நிர்ப்¬பந்¬தம். வேற வழி இல்¬லாம இந்த படத்¬தில் நடிக்க ஆரம்¬பிச்¬சேன். இந்த 'டோர்' எனக்கு 'ரீ என்ட்ரி' .கண¬வர் தயா¬ரிப்பு என்¬ப¬தால் படத்¬தில் பல விஷ¬யங்¬களில் கவ¬னம் செலுத்த விரும்¬பி¬னேன். பிற¬மொழி படங்¬களில் பிசி¬யாக இருந்¬த¬தால், நடிக்¬கி¬றேன் என்-பதை தாண்டி வேறு ஏதும் என்¬னால் செய்ய முடி¬ய¬வில்லை. நம்ம உல¬கத்¬துக்¬கும், ஒரு தீய சக்¬திக்¬கும் இடை¬யில் ஒரு டோர் மூலம் தான் கதை தொடங்¬கும். சிம்¬பிளா இருக்¬கும் படம்.
மீண்¬டும் நடிக்க 14 வருட இடை¬வெளி ஏன்
தமிழ் சினி¬மா¬வில் எனக்கு பெரிய தொடர்பு எதும் இல்லை. 'பாவனா வேறு மொழி¬யில் ¬தான் நடிப்¬பாங்க' என்று சொல்¬லு¬வாங்க; எது¬வுமே உண்மை இல்ல. சில கதை¬கள் வரும். அதில் எனக்கு ரோல் சரியா இருக்¬காது. அதுக்கு நடிக்¬கா¬மல் இருக்¬க¬லாம் என நினைப்¬பேன்.
2005- சித்¬தி¬ரம் பேசு¬தடி, 2025 -டோர் படம். நிறைய அனு¬ப¬வம் இருக்¬கும். இப்-போது சினிமா எப்¬படி இருக்கு
வழக்¬க¬மாக ஒரு ஹீரோ, ஹீரோ¬யின், வில்¬லன் இதெல்¬லாம் தாண்டி புதுசு புதுசா யோசித்து கதை எழு¬து¬றாங்க. கதைக்கு தகுந்த நடி¬கர்¬களை தேர்வு செய்றாங்க. கதை தான் முக்¬கி¬யமா இப்¬போது இருக்கு.
சினி¬மா¬வில் பெண்¬க¬ளுக்¬கான மதிப்பு எப்¬படி இருக்கிறது. ஆணா¬திக்¬கம் அதி-கம் இருக்கா
சினி¬மா¬வில் ஒரு கட்¬டத்¬துக்கு வந்து விட்¬டால், நமக்கென்று ஒரு 'வாய்ஸ்' இருக்-கும். சொல்¬வதை கேப்பாங்க. என் ஆரம்¬ப¬கால சினிமா பய¬ணத்¬தில் நான் கிளா-மர் வேடங்¬களில் நடிக்க முடி¬யாது என்று சொன்¬னேன். இத¬னால் நிறைய படங்¬கள் கைவிட்டு போச்சு. சினிமா ஆண் ஆதிக்¬கம் உள்ள துறை தான். எனக்கு கூடவே நடிக்¬கும் பெண்¬க¬ளா¬லும் பிரச்னை. அதி¬க¬மான மோச¬மான அனு¬ப¬வம் பெண்¬க-ளால் தான் எனக்கு. ஒரு கட்¬டத்¬துக்கு மேல் முடிவு எடுக்க வேண்¬டிய சூழ்¬நிலை நமக்கு வரும். அப்¬போது உறு¬தி¬யாக இருக்க வேண்¬டும்.
எந்த நடி¬கர் கூட நடிக்¬காம விட்ட வருத்¬தம் இருக்¬கிறது
கமல்¬ஹா¬சன்
உங்க திரு¬மண வாழ்க்கை எப்¬படி இருக்¬கிறது
ரொம்ப சந்¬தோ¬ஷமா இருக்¬கேன். கண¬வர் 'பிசி¬னஸ்' செய்¬கி¬றார். ஏற்¬க¬னவே கன்-னட படங்¬கள் சில தயா¬ரித்து உள்¬ளார். பெரிய இடை¬வெ¬ளிக்கு பிறகு ஒரு படம் தயாரித்துள்¬ளார். அது தமி¬ழில் வரு¬வது மகிழ்ச்சி.
கேர¬ள திரைத்¬து¬றை¬யில் பாலி¬யல் அத்து¬மீ¬றல்¬களை விசாரிக்¬கும் ஹேமா கமிட்டி பய¬னுள்¬ள¬தாக இருக்¬கிறதா
எந்த அள¬வுக்கு பய¬னுள்¬ள¬து என சொல்¬லும் அள¬வுக்கு நான் வள¬ர¬வில்லை. நிறைய 'கதை¬கள்' இருக்¬கிறது. பாதிக்¬கப்¬பட்ட பெண்¬கள் இருக்¬காங்க. நிறைய 'மிஸ் யூஸ்' மாதி¬ரி¬யும் தோணுது. பெரிய மாற்¬றம் இல்லை என்¬றா¬லும் நடி¬கை¬க-ளுக்கு உத¬வும் விஷ¬யம் தான்.
எல்லா மொழிப் படங்¬க¬ளி¬லும் பாலி¬யல் தொந்தர¬வு¬ இருக்¬கிறது என நினைக்¬கி-றீங்¬களா
கண்¬டிப்¬பாக இருக்¬க¬லாம்; இல்¬லா¬ம¬லும் இருக்¬க¬லாம். இன்¬னும் நடந்¬துட்டு இருக்கு அப்¬ப¬டின்னு சொல்ல முடி¬யல. இது மாதிரி நடக்¬கவே இல்லை என்¬றும் என்¬னால சொல்ல முடி¬ய¬வில்லை.
வாழ்க்¬கை¬யில் மறக்¬க¬ணும்னு நினைக்¬கிற விஷயம்; மறக்¬கவே கூடா¬துன்னு நினைக்¬கிற விஷயம் எது
எந்த விஷ¬யத்¬தை¬யும் மறக்¬கக்¬கூ¬டாது என நினைக்¬கி¬றேன். அதெல்¬லாம் பெரிய அனு¬ப¬வத்தை கொடுத்து தான் இங்கே அமர்ந்து இருக்¬கி¬றேன்.
குழந்தை பற்றி உங்க கண¬வர் ஏதும் பேசு¬வாரா
நாங்க ரெண்டு பேருமே 'ஒரு இத¬மான சூழ்¬நிலை வந்த பிறகு குழந்தை பெற்¬றுக் கொள்¬வது பற்றி பேசிக்¬க¬லாம்' என்று ஒரு முடிவு செய்¬தோம். இப்¬போது அவ¬ரும் பேசல; நானும் இதை பற்றி பேசல!
தமிழ் ரசி¬கர்¬க¬ளுக்கு என்ன சொல்ல விரும்¬பு¬கி¬றீர்¬கள்
ரொம்ப வரு¬ஷத்¬திற்கு பிறகு நடிக்க வந்¬தி¬ருக்¬கி¬றேன். என்னை மறக்¬க¬வில்லை என்று நினைக்¬கி¬றேன். 'டோர்' படம் பாருங்க! போர் ஆகாது!
புதிதாக வரக்கூடிய நடிகைகளுக்கு உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள்
எனக்கு என்ன சரின்னு படுதோ அதை நான் செய்றேன். அது இன்னொருவருக்கு தப்பா தெரியும். எனக்கு தெரிந்து, நல்லது கெட்டதை அவங்கவங்க முடிவு செய்யணும். சினிமா நல்ல தொழில். அதோட வளர்ச்சி, ‛ரீச்' தெரிந்து பணிபுரிய வேண்டும்.