அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
ஹிந்தி வெப் தொடர்களில் நடித்து வந்தவர்கள் டோலி சோஹி மற்றும் அவரது சகோதரி அமந்தீப் சோஹி. இருவரும் பல தொடர்களில் நடித்துள்ளனர். கலாஷ் மற்றும் பாபி படங்களில் ஹீரோயினாக டோலி சோஹி நடித்துள்ளார். 'ஜான்சி கி ராணி' தொடரில் ஜான்சி ராணியாக நடித்து புகழ்பெற்றார். அதன்பிறகு ஏராளமான தொடர்களில் நடித்தார். 48 வயதான டோலி, கர்ப்ப பை புற்று நோயால் பல ஆண்டுகள் அவதிப்பட்டு வந்தார். அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.
டோலி சோஹியின் தங்கை அமன்தீப் சோஹி. 'பட்டமீஸ் தில்' என்ற படத்தில் அறிமுகமான இவர் 'ஜனக்' தொடர் மூலம் புகழ்பெற்றார். ஏராளமான தொலைக்காட்சி தொடரில் நடித்தார். அமன்தீப் மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்தார். அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் தான் அவர் இறந்தார். அதற்கு அடுத்த நாளிலேயே டோலி சோஹி மறைந்தார்.
அடுத்தடுத்த நாளில் அக்கா, தங்கை நடிகைகள் மரணம் அடைந்தது பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.