அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
தமிழில் தாம் தூம், தலைவி, சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்தவர் பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரனாவத். சமீபத்தில் நடந்த முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட விழாவில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் நடனம் ஆடினர். இவர் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.
இது குறித்து தனது சமூக வலைதளத்தில் கங்கனா வெளியிட்டுள்ள பதிவில், ‛‛பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் எத்தனை கோடிகளை கொடுத்தாலும் திருமண விழாக்களில் பாட மாட்டேன் என்று கூறியது போல, நானும் ஒரு கொள்கையை பின்பற்றி வருகிறேன். அதன் காரணமாகவே எத்தனை கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் திருமண விழாக்களில் நடனம் ஆடுவதில்லை. பல திருமண விழாக்களில் நடனமாட எனக்கு அழைப்பு வந்த போதும், நான் மறுத்துவிட்டேன். அதோடு விருது நிகழ்ச்சிகளில் கூட நான் நடனம் ஆடுவதில்லை. நல்ல முறையில் பணத்தை உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இதைச் சொல்கிறேன்'' என்கிறார்.