மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு, கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னாய் தரப்பிலிருந்து மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் லாரன்ஸ் பிஷ்னாய் என்ற பெயரில் ஒரு கணக்கிலிருந்து பஞ்சாபி பாடகர் மற்றும் நடிகரான ஜிப்பி கிரேவாலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
“சல்மான் கானை நீங்கள் ஒரு சகோதரர் எனக் கருதுகிறீர்கள். இப்போது உங்கள் சகோதரர் உங்களை வந்து பாதுகாக்க வர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த மெசேஜ் சல்மான் கானுக்கும் சேர்த்துதான்… தாவூத் உங்களைக் காப்பாற்றுவார் என்ற மாயையில் இருக்க வேண்டாம். உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. சித்து மூஸ்வாலாவின் மரணத்திற்கு உங்கள் அதிரடியான பதில் கவனிக்கப்படாமல் போகவில்லை. அவர் எப்படிப்பட்டவர் என்பதும், அவருக்கு இருந்த குற்றச் செயல்கள் குறித்தும் நாம் அனைவரும் அறிவோம். நீங்கள் இப்போது எங்கள் ரேடாரில் வந்துவிட்டீர்கள். இதை ஒரு டிரைலராகக் கருதுங்கள். முழு படமும் விரைவில் வெளியாகும். நீங்கள் விரும்பும் எந்த நாட்டிற்கும் தப்பிச் செல்லுங்கள். ஆனால், நினைவில் கொள்ளுங்கள். மரணத்திற்கு விசா தேவையில்லை, அது அழைக்கப்படாமல் வருகிறது,” என அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய மிரட்டலுக்குப் பிறகு மும்பை போலீசார் சல்மான்கானின் பாதுகாப்பு குறித்து மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் பேஸ்புக் நிறுவனத்திடம் அந்தப் பதிவு எங்கிருந்து பதிவானது என கேட்டுள்ளார்களாம்.
பஞ்சாபி பாடகர், நடிகர் ஜிப்பி கிரேவாலின் கனடா வீட்டில் சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது வான்கூவர் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்தது. அதைத் தாங்கள்தான் செய்தோம் என பிஷ்னாய் தரப்பு தெரிவித்துள்ளது.
புல்வாய் இன மானைக் கொன்ற வழக்கில் சல்மான் கானுக்கு ஐந்து வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த இன மான்களை பழங்குடி இனத்தைச் சேர்ந்த பிஷ்னாய் மக்கள் அவர்களது குரு பகவான் ஜம்பேஷ்வரின் மறு அவதாரமாகக் கருதுகிறார்கள். அந்த பிஷ்னாய் இனத்தைச் சேர்ந்தவர்தான் கேங்ஸ்டரான லாரன்ஸ் பிஷ்னாய். தாங்கள் புனிதமாகக் கருதும் புல்வாய் மானைக் கொன்ற சல்மானைக் கொல்ல வேண்டும் என்ற வெறியில் இருக்கிறார் லாரன்ஸ்.
தற்போது சிறையில் இருக்கும் லாரன்ஸ் ஆட்கள் தான் சல்மானுக்கு ஏற்கெனவே மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்தார்கள். அதன்பிறகு சல்மான் குண்டு துளைக்காத கார், கைத்துப்பாக்கி என தனது பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டுள்ளார்.