தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
பாலிவுட்டில் உச்ச நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். கடைசியாக அவர் நடித்து வெளிவந்த பதான் திரைப்படம் தான் பாலிவுட்டை சரிவில் இருந்து மீட்டது. அந்தப்படம் உலகளவில் ரூ.1000 கோடி வசூல் சாதனை புரிந்தது. இதையடுத்து வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி அவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் வெளியாகிறது. அட்லி இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதை தொடர்ந்து 3 இடியட்ஸ், சஞ்சு, பி.கே போன்ற படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஷாருக்கான் டன்கி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் டாப்ஸி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வருகின்ற டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் பிஸ்னஸ் தற்போது துவங்கியுள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜியோ சினிமாஸ் நிறுவனம் ரூ. 155 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு மொழியில் இதுதான் இந்திய சினிமாவிலே அதிக விலைக்கு வியாபாரம் ஆன படம் என்பது குறிப்பிடத்தக்கது.