2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
ஹிந்தி நடிகர்களில் அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சை மூலம் பரபரப்பாகப் பேசப்படுபவர் சல்மான் கான். சல்மான் கான் என்றாலே சட்டையைக் கழற்றி நடிப்பவர் என்ற ஒரு அடையாளம் உண்டு.
நேற்று அவர் நடித்த ''கிசி கா பாய் கிசி கி ஜான்'' ஹிந்திப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. அப்போது சல்மான் தனது சட்டை மேல் பட்டன்களைக் கழட்டிவிட்டு, “இது விஎப்எக்ஸ்--ல் உருவாக்கப்பட்டது என நினைக்கிறீர்களா,” என்று கேட்டார். அப்படத்தில் சல்மானின் சிக்ஸ் பேக் தோற்றம் பற்றி பலரும் சமூக வலைத்தளங்களில் அது விஎப்எக்ஸ்ல் உருவாக்கப்பட்டது என கிண்டலடித்திருந்தனர். அவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவே நேற்று அவர் நடந்து கொண்டார்.
சல்மான் பட்டன்களைக் கழட்டும் போது மேடையில் பக்கத்திலிருந்த படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே கைதட்டி சிரித்து வரவேற்றார். இந்தியத் திரையுலகத்தில் முதன் முதலில் சிக்ஸ் பேக் என்ற தோற்றத்தை அறிமுகப்படுத்திய அசத்தியவர் சல்மான் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அவரைக் காப்பியடித்துத்தான் பலரும் பின்னர் சிக்ஸ் பேக் வைக்க ஆரம்பித்தார்கள். வேறு எந்த ஹீரோவாவது படத்தில் சட்டையைக் கழட்டி சண்டை போட்டால் 'பெரிய சல்மான்கான்னு நெனப்பு' என்ற கமெண்ட்டுகள் வர ஆரம்பித்தன.