ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

தமிழிலிருந்து ஹிந்திக்கும் பல படங்கள் காலம் காலமாக ரீமேக்காகி வருகிறது. சமீப காலமாக ஹிந்தியில் முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் பெரும் மசாலா படங்களாக மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன.
'கைதி' படத்தை ஹிந்தியில் 'போலா' என ரீமேக் செய்து பத்து நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்கள். 'கைதி' படத்தில் இருந்த அந்த தரத்தை தவிடுபொடியாக்கி வெறும் கமர்ஷியல் படமாக மட்டுமே ஹிந்தியில் கொடுத்திருந்தார்கள். பெரும் வசூலைப் பெற முடியாமல் அந்தப் படம் தடுமாறி வருகிறது.
இந்நிலையில் அஜித், தமன்னா நடித்து 2014ல் வெளிவந்த 'வீரம்' படத்தை ஹிந்தியில் சல்மான் கான், பூஜா ஹெக்டே, தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், ஜெகபதி பாபு மற்றும் பலர் நடிக்க 'கிசி கா பாய் கிசி கி ஜான்' என ரீமேக் செய்து வருகிறார்கள். அதன் டிரைலரை நேற்று வெளியிட்டார்கள்.
டிரைலரின் முதல் பாதியில் சல்மான், பூஜா இடையிலான காதல் காட்சிகளும், இரண்டாம் பாதியில் ஆக்ஷன் மட்டுமே இடம் பெறும் விதத்திலும் டிரைலர் உள்ளது. கடந்த 16 மணி நேரங்களில் 8 மில்லியன் பார்வைகளை இந்த டிரைலர் கடந்துள்ளது. ஹிந்தியிலும் அதிரடி மசாலாப் படமாகவே எடுத்திருக்கிறார்கள் என்பதை டிரைலரைப் பார்க்கும் போதே தெரிகிறது. ஏப்ரல் 21ம் தேதி இப்படம் வெளியாகிறது.