தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! |
கேஜிஎப் படம் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இவர்களுடன் பிரபல நடிகர்கள் ஜெகபதி பாபு, பிரித்விராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து பிரசாந்த் நீலின் அடுத்த படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இதில் கதாநாயகனாக ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். ஜூனியர் என்டிஆர் 31வது படமாக உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் இரு நிறுவங்களும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது . இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம்.
இதை முடித்த பிறகு கேஜிஎப் 3 படத்தை அவர் இயக்குவார் என தெரிகிறது.