பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கன்னடத் திரையிலகத்தில் 2016ல் வெளிவந்த 'கிரிக் பார்ட்டி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதன் பிறகு 2018ல் வெளிவந்த 'சலோ' படம் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார். குறுகிய காலத்தில் தெலுங்கில் அனைவரையும் கவர்ந்த கதாநாயகியாக உயர்ந்தார். 2021ல் வெளிவந்த 'சுல்தான்' படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.
தற்போது விஜய் ஜோடியாக 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. மேலும் சில தமிழ்ப் படங்களில் அவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஹிந்தியில் ராஷ்மிகா கதாநாயகியாக அறிமுகமாகும் 'குட் பை' படம் இன்று வெளியாகிறது. விகாஸ் பாஹி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், நீனா குப்தா, சுனில் குரோவர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தனது முதல் ஹிந்திப் படத்திலேயே அமிதாப்புடன் நடிக்கும் வாய்ப்பு ராஷ்மிகாவுக்குக் கிடைத்துள்ளது. மேலும், முதல் ஹிந்திப் படம் வெளிவருவதற்கு முன்பே 'மிஷின் மஜ்னு, அனிமல்' ஆகிய ஹிந்திப் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.
கடந்த வருடம் தெலுங்கில் தயாராகி பான் இந்தியா படமாக வெளிவந்த 'புஷ்பா' படம் ராஷ்மிகாவை வட இந்தியா பக்கமும் பிரபலமாக்கியது. அதனால், இன்று வெளியாகும் அவரது முதல் நேரடி ஹிந்திப் படமான 'குட் பை' படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.