சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான 'லூசிபர்' படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க 'காட் பாதர்' என்ற பெயரில் ரீமேக்காகி நேற்று வெளியானது. இப்படத்தில் ஹிந்தி நடிகர் சல்மான் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் வரவேற்பு கிடைத்துள்ளது. சிரஞ்சீவிக்கு இப்படம் வெற்றிப் படமாக அமையும் என டோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள சல்மான் கான் வீடியோ மூலம் சிரஞ்சீவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “எனது அன்பான சிரஞ்சீவி காரு, ஐ லவ் யு. 'காட் பாதர்' படம் நன்றாகப் போவதாகக் கேள்விப்பட்டேன். வாழ்த்துகள், கடவுள் ஆசீர்வதிக்கட்டும். உங்களுக்குத் தெரியுமா சிரு காரு, இந்த நாடும் நாட்டு மக்களும் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள்,” எனக் கூறியுள்ளார்.
சல்மான் கானுக்கு சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண் நன்றி தெரிவித்துள்ளார். சல்மானின் வீடியோவிற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளன. இது படத்திற்கும் சரியான புரமோஷனாக அமைந்துவிட்டது.