'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் : பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
சிவா இயக்கத்தில், அஜித், தமன்னா, சந்தானம் மற்றும் பலர் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளிவந்த படம் 'வீரம்'. இப்படம் பின்னர் தெலுங்கில் பவன் கல்யாண், ஸ்ருதிஹாசன் நடிக்க 'கட்டமராயுடு' என்ற பெயரில் 2017ம் ஆண்டிலும், கன்னடத்தில் தர்ஷன், சனா திம்மய்யா நடிக்க 'ஒடேயா' என்ற பெயரில் 2019ம் ஆண்டிலும் ரீமேக் செய்யப்பட்டது.
தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடத்தில் இப்படம் பெரிய வரவேற்பையும், வெற்றியையும் பெறவில்லை. இந்நிலையில் இப்படத்தை ஹிந்தியில் சல்மான் கான் ரீமேக் செய்யப் போவதாக செய்திகள் வெளிவந்தன. பின்னர் அந்த எண்ணத்தை அவர் கைவிட்டார் என்று சொன்னார்கள். இதனிடையே, இப்போது சல்மான் கான் நடித்து வரும் 'கிசி பாய், கிசி கி ஜான்' என்ற படம் 'வீரம்' படத்தின் ரீமேக்காகத்தான் உருவாகி வருகிறது என்கிறார்கள்.
இப்படத்திற்கு முதலில், 'கபி ஈத் கபி தீவாளி' எனப் பெயரிட்டிருந்தார்கள். சமீபத்தில் 'கிசி பாய் கிசி கி ஜான்' எனப் பெயர் மாற்றியுள்ளார்கள். இதற்கு 'யாரோ ஒருவரின் சகோதரர், யாரோ ஒருவரின் அன்புக்குரியவர்' என்று அர்த்தம். இப்படத்தில் சல்மான் ஜோடியாக பூஜா ஹெக்டே நடக்கிறார். தெலுங்கு சீனியர் ஹீரோவான வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்திலும் ஜெகபதி பாபு வில்லனாகவும் நடிக்கிறார்கள். இந்த வருடக் கடைசியில் இப்படம் வெளியாக உள்ளது.