ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், பவன் கல்யாண், நிதி அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் பான் இந்தியா படமாக வெளியான தெலுங்குப் படம் 'ஹரிஹர வீரமல்லு'. இப்படத்திற்கான எதிர்பார்ப்பு முதலில் அதிகமாக இருந்ததால் வெளியீட்டிற்கு முன்பாக நல்ல முன்பதிவு இருந்தது. ஆனால், படம் வெளியான பின்பு படம் பற்றி கலவையான விமர்சனங்கள் வெளியானது படத்திற்கு நெகட்டிவ்வாக அமைந்தது. படத்தில் இடம் பெற்ற விஎப்எக்ஸ் காட்சிகள் தரம் குறைவாக இருந்ததாக கடும் விமர்சனங்கள் வந்தன. இதனால், படத்தில் அந்தக் காட்சிகளைக் குறைக்க முடிவு செய்து, சுமார் 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை குறைத்துள்ளார்களாம்.
இது குறித்த எவ்வளவு நிமிடம் என்பதைக் குறிப்பிடாமல் சிறந்த திரைப்பட அனுபவத்தைப் பெற, கன்டென்ட்டை அப்டேட் செய்து ரீலோட் செய்துள்ளோம் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தெலங்கானாவை விட ஆந்திராவில் இப்படம் குறிப்பிடும்படியான வரவேற்பைப் பெறுவதாக டோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த நான்கு நாட்களில் இப்படம் 100 கோடி வசூலை நெருங்கியுள்ளதாகவும் சொல்கிறார்கள்.