டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சஞ்சய் லீலா பன்சாலி. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளிவந்த 'கங்குபாய் கத்தியவாடி' படம் கூடி ரூ.100 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. வித்தியாசமான படங்களைக் கொடுக்கும் பாலிவுட் இயக்குனர்களில் இவரும் ஒருவர்.
'புஷ்பா' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் ரூ.100 கோடி வசூலைப் பெற்ற நடிகராக தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் அங்கும் தன்னுடைய தடத்தைப் பதித்துள்ளார். நேற்று இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை அல்லு அர்ஜுன் சந்தித்துப் பேசியுள்ளார்.
'கங்குபாய் கத்தியவாடி' படத்திற்குப் பிறகு சஞ்சய் லீலா இயக்கப் போகும் படம் எது என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. அல்லு அர்ஜுன் அடுத்ததாக 'புஷ்பா 2' படத்தில் விரைவில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்குப் பிறகு நடிப்பதற்காக சில கதைகளை அல்லு அர்ஜுன் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும் 'புஷ்பா' படத்தின் மூலம் கிடைத்த பான்-இந்தியா அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொள்ளும் விதமாக சஞ்சய் படத்தில் நடிக்கத்தான் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அனைத்து மொழிகளிலும் 'புஷ்பா' நல்ல வசூலைப் பெற்றுள்ளதால் தனது அடுத்த படத்தை மிகவும் கவனமாக அல்லு அர்ஜுன் தேர்வு செய்வார் என்கிறார்கள்.