அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி |

கற்பனை கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்து இந்திய அளவில் சூப்பர் ஹீரோவாக உருவெடுத்திருப்பவர் ஹிருத்திக் ரோஷன். அந்த கதாபாத்திரங்களுக்கு அவர் கச்சிதமாக பொருந்துவார். அதனால் தான் அவர் நடித்த கிரிஷ் படத்தின் முந்தைய பாகங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.
இந்த நிலையில் அடுத்து ராகேஷ் ரோஷன் இயக்கும் கிரிஷ்-4 படத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கப் போவதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் வருகிற ஜூன் மாதம் முதல் தொடங்கி பர்ஸ்ட் லுக்கை வருட இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
தற்போது ஹிருத்திக் ரோஷன் விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். இப்படம் செப்டம்பர் 30-ந்தேதி திரைக்கு வருகிறது. அதேபோல் அவரது இன்னொரு படமான பைட்டரும் செப்டம்பர் 28-ந்தேதி வெளியாகிறது. அதனால் தற்போது நடித்து வரும் இரண்டு படங்களையும் முடித்து விட்டு கிரிஷ்-4 படத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக தெரிகிறது.