ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜய் தேவரகொண்டாவை முன்னணி ஹீரோவாக உயர்த்திய 'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. அதன்பிறகு சாகித் கபூர் நடிப்பில் அதன் இந்தி ரீமேக்கான கபீர் சிங்கையும் இயக்கி வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டிலேயே தனது அடுத்த படத்தையும் இயக்குகிறார் சந்தீப் ரெட்டி வங்கா. அனிமல் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடிக்கிறார்.
தற்போது இந்த படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனம் ஆடுவதற்காக தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் கூட நடிகை சமந்தா சமீபத்தில் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி அது ரொம்பவே பிரபலமானது. சமந்தாவுக்கும் பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டது. அதே பாணியை அதிலும் தன்னைத் தேடி வந்து அழைக்கும் பாலிவுட்டில் ஏன் பின்பற்ற கூடாது என நினைக்கும் ராஷ்மிகா இதற்கு ஒப்புக் கொண்டுவிட்டார் என்றே சொல்லப்படுகிறது.