ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
அறிமுகமான காலக்கட்டத்தில் மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகம் தன்னை புறக்கணித்ததால் வைராக்கியத்துடன் பாலிவுட் சென்று அங்கே முன்னணி நடிகையாக மாறியவர் நடிகை வித்யாபாலன். அதேபோல தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வந்த போதும் ஹிந்தி படத்தில் நடிக்கும் ஆசையால் தெலுங்கு திரையுலகை ஒதுக்கிவிட்டு பாலிவுட்டுக்கு சென்று ஓரிரு படங்களில் நடித்த நிலையில் பாலிவுட்டால் புறக்கணிக்கப்பட்டு திரும்பி வந்தவர் நடிகை இலியானா. தற்போது இவர்கள் இருவருமே இணைந்து ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க இருக்கின்றனர்.
இவர்களுடன் தி ஸ்கேம் 1992 புகழ் நடிகர் பிரதீக் காந்தி மற்றும் அமெரிக்க இந்திய நடிகரான செந்தில் ராமமூர்த்தி ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்கள் நால்வரும் ஒன்றாக இணைந்து ஜாலியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தை பிரபல விளம்பர பட இயக்குனரான ஷிர்ஷா குகா தகுர்த்தா என்பவர் இயக்குகிறார். இந்தப் படம் தடைகளற்ற நவீன மனித உறவுகள் பற்றி அலசுகிறது