பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது |

கேரளாவில் பிறந்து வளர்ந்தாலும் மலையாள திரை உலகை ஒதுக்கிவிட்டு பாலிவுட்டுக்கு சென்று முன்னணி நடிகையாக மாறியவர் வித்யாபாலன். தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் வித்யாபாலன் மலையாளத்தில் அவ்வப்போது வெளியாகி வரவேற்பு பெரும் படங்கள் குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள தவறுவதில்லை. அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்று அவர் கடந்த வருடம் மம்முட்டி, ஜோதிகா நடிப்பில் வெளியான காதல் : தி கோ என்கிற படத்தைப் பற்றியும் அதில் மம்முட்டியின் நடிப்பு பற்றியும் சிலாகித்து கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “மம்முட்டி மிகச்சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமே இல்லை. குறிப்பாக காதல் : தி கோர் படத்தில் அவர் ஏற்று நடித்த ஓரின சேர்க்கையாளர் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டது பெரிய விஷயம் என்பதை விட அந்த படத்தை தயாரிக்க முடிவெடுத்த அவரது துணிச்சல் அதைவிட பாராட்டப்பட வேண்டிய விஷயம். அந்த கதாபாத்திரத்தில் மம்முட்டிக்கு பதிலாக இங்கே பாலிவுட்டில் நடிக்கும் அளவிற்கு எந்த நடிகர்களும் இல்லை என்று தான் சொல்வேன் என்று கூறி உள்ளார். மேலும் இது போன்ற படங்களை ரசிக்கும் அளவிற்கு கேரள ரசிகர்களின் இலக்கியத்தன்மை இன்னும் அதிகரித்து இருக்கிறது என்றும் கூறியுள்ளார் வித்யாபாலன்.