டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

கேடி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் இலியானா. அதன்பிறகு ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் நடித்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு மைக்கேல் டோலன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இலியானாவுக்கு அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு இரண்டாவதாகவும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த ஜூன் 19ம் தேதி தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ள நிலையில், தற்போது மகனின் புகைப்படத்தை இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு, எங்களது இதயங்கள் நிறைந்துள்ளன என்றும் அவர் ஒரு பதிவு போட்டுள்ளார். குழந்தைக்கு கீனு ரபி டோலன் என பெயரிட்டுள்ளார். இதையடுத்து இலியானாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.