'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
அழகே அழகை பார்த்து பொறாமை கொள்ளும் வெண்ணிற அழகி... ஆளை கவிழ்க்கும் அசைவுகளில் இளசுகளின் இதயங்களில் ஆட்டம் போடும் பேரழகி... கொரோனா சூழலில் தியேட்டர்கள் திறக்காத போதும் வெப் சீரிஸ் வழி நம் வீட்டு டிவிக்களில் ஜொலிக்கும் கிளாமர் நட்சத்திரம் தமன்னா மனம் திறக்கிறார்...
கொரோனாவில் மீண்ட நீங்கள் மக்களுக்கு சொல்வது ?
வீட்டை விட்டு வெளியே போகாதீங்க. அவசரத்திற்கு போனால் கூட இரண்டு மாஸ்க் மாட்டுங்க. ஒவ்வொருவரின் இறப்பு செய்தியை கேட்கும் போது பயமா இருக்கு. அரசு விதிமுறைகளை அவசியம் பின்பற்றுங்க. முடிந்த வரை எல்லாரும் தடுப்பூசி செலுத்திக்கோங்க.
நீங்கள் நடித்த நவம்பர் ஸ்டோரி ஓ.டி.டி.,க்கு எடுத்ததா ?
அது இரண்டு ஆண்டுகளுக்கு முன் கேட்ட கதை. அப்போ வெப் சீரிஸில் நடிக்க நிறைய கதைகள் கேட்டுட்டு இருந்தேன். அந்த அனுபவம் கொஞ்சம் புதுசா இருக்கும்னு தோணுச்சு. அதனால் அதை பயன்படுத்தினேன். ஒ.டி.டி., சினிமா மாதிரி இல்லை. வீட்ல உட்கார்ந்து பிடிச்சா பார்க்கலாம் இல்லாட்டிஆப் பண்ணிடலாம்.
நவம்பர் ஸ்டோரி படத்தில் உங்கள் கேரக்டர், கதை என்ன ?
மக்கள் விரும்பும் கதைக்காக காத்திருந்த போது நவம்பர் ஸ்டோரி திரில்லர் கதை வந்தது. அப்பா, மகளுக்குமான உணர்வு படத்தின் கதை. இயக்குனர் ராம்க்கு முதல் படம் மாதிரி தெரியல. அவ்வளவு தெளிவா இருந்தாங்க. இது என் முதல் வெப் சீரிஸ். இந்த படத்தின் அனுராதாங்குற கேரக்டர் ரொம்ப பிடிச்சிருக்கு.
![]() |