ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தற்போது தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப கதையம்சம் கொண்ட தொடர்களை வழங்கி டிஆர்பியில் எட்டிப் பார்க்க ஆரம்பிந்துள்ளது. அந்த வகையில் கலர்ஸ் தமிழின் முக்கிய தொடர்களில் ஒன்றாக 'சில்லுன்னு ஒரு காதல்' ரசிகர்களின் மனதை தொட்டுள்ளது. இதுவரை 275 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில் சமீர் அஹமது, தர்ஷினி கெளடா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சீரியலின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்து வந்த அதன் இயக்குநர் சுரேஷ் ஷண்முக தொடரை விட்டு தற்போது விலகியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். டெக்னீசியன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிடுள்ள சுரேஷ், 'பிரசவத்தில் குழந்தையை பறிகொடுத்த தாயை போன்ற என் நிலை...' என சீரியலை விட்டு போவதை மிகவும் உருக்கமாக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.