ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணனுக்கு ஜோடியாக வரும் ஐஸ்வர்யா கதாபாத்திரம் ஆரம்பம் முதலே சொதப்பி வருகிறது. முதலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தவர் வைஷாலி தனிகா தான். ஆனால், திடீரென வைஷாலி தனிகா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக விஜே தீபிகா நடிக்க ஆரம்பித்தார். அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், தீபிகாவுக்கு ஏற்பட்ட சர்ம பிரச்னை காரணமாக அவரும் நீக்கப்பட்டார். தற்போது கண்ணனுக்கு ஜோடியாக சாய் காயத்ரி நடித்து வருகிறார்.
இந்நிலையில் சாய் காயத்ரி கண்ணனை கம்பேர் செய்யும் போது மிகவும் மெச்சூராக இருப்பதாக ரசிகர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக சாய் காயத்ரியும் மாற்றப்படலாம் என்ற செய்தியும் உலா வந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீண்டும் நடிப்பீர்களா'? என தீபிகாவின் ரசிகர் இண்ஸ்டாவில் கேள்வி எழுப்ப, அதற்கு 'வாய்ப்பே இல்லை' என ஒரே போடாக போட்டுள்ளார் தீபிகா. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ஐஸ்வர்யா கதாபாத்திரத்திற்கு சரியான ரீப்ளேஸ்மெண்ட் கிடைக்காமல் சீரியல் குழுவினர் திணறி வருகின்றனர்.