திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கவுள்ள "சர்வைவர்" ரியாலிட்டி ஷோவில் அனிகா சுரேந்தர் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. 16-வயது மட்டுமே ஆன அனிகா இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் முன்னணி நடிகைகளுக்கே சவால் விடும் அளவிற்கு இருக்கும்.
திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து கொண்டிருந்த இவருக்கு தெலுங்கு படம் ஒன்றில் ஹீரோயின் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் ரியாலிட்டி ஷோவில் அனிகா பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.