காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். அது சின்னத்திரைக்கு கச்சிதமாக பொருந்தும். கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக இவருக்கு பதில் இவர் அதிகமாக நடந்து வருகிறது.
400 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகி வரும் தொடர் மகராசி. இதில் திவ்யா ஸ்ரீதர், எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன், மவுனிகா தேவி, தீபன் சக்கரவர்த்தி ராம்ஜி உள்பட பலர் நடித்து வருகிறார்கள். திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கி வருகிறார்.
இந்த தொடரில் இருந்து இதற்கு முன் சிறிய கேரக்டரில் நடித்த பலர் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இப்போது ஹீரோயினே மாற்றப்பட்டு விட்டார். இதுவரை தொடரின் நாயகியாக நடித்து வந்த திவ்யா ஸ்ரீதர் தொடரில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார், அல்லது விலகி இருக்கிறார். இதற்கான காரணம் தெரியவில்லை.
அவருக்கு பதிலாக அவர் நடித்து வந்த பாரதி புவியரசன் கேரக்டரில் இனி நடிப்பது ஸ்ரிதிகா. இவர் நடிக்கும் பகுதி 414வது எபிசோடில் இருந்து ஒளிபரப்பாகிறது.
ஸ்ரிதிகா, கலசம், கோகுலத்தில் சீதை, நாதஸ்வரம், மாமியார் தேவை, உணர்வுகள் சங்கமம், உயிர்மை, குல தெய்வம், என் இனிய தோழியே, கல்யாண பரிசு, அழகு உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர். மகேஷ் சரண்யா மற்றும் பலர், வெண்ணிலா கபடி குழு, வேங்கை, மதுரை டூ ஆண்டிப்பட்டி வழி தேனி என்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.