ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பக்தி தொடர் அம்மன். இதில் பவித்ரா கவுடா அம்மனாக நடிக்கிறார். அவருடன் அமல்ஜித், நந்திதா ஜெனிபர் நடிக்கிறார்கள். தற்போது பரமேஸ்வரன் என்பவர் இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இது ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரில் தற்போது புதிதாக இணைந்திருக்கிறார் கன்னட டிவி நடிகை ரஜனி பிரவீன். இவர் கன்னட சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர். தற்போது அம்மன் சீரியல் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்த தொடரில் அவர் அம்மனுக்கு எதிரான வில்லி கேரக்டரில் நடிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: அம்மன் சீரியலில் நான் தாரா என்று ரோலில் நடிப்பதை மகிழ்ச்சியாக அறிவிக்கிறேன். நடிக்க இதில் அதிக வாய்ப்பு இருக்கிறது. எனக்கு மொழி தெரியாத காரணத்தினால், எனக்கு உறுதுணையாக இருக்கும் துணை இயக்குனர்களுக்கு நன்றி. என்று தெரிவித்துள்ளார்.