ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கொரேனாவின் 2வது அலை தீவிரமாக தமிழ்நாட்டில் பரவி வரும் நிலையில் கடந்த பல மாதங்களாகவே ஊரடங்கு தளர்வுகளுடனும், தளர்வுகள் இல்லாமலும் நடைமுறையில் இருக்கிறது. சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது. என்றாலும் சின்னத்திரை சேனல்களின் ஒரே நம்பிக்கையாக இருக்கும் சீரியல்களுக்கு படப்பிடிப்புகள் நடத்தியே ஆக வேண்டும். ஒரு சீரியலில் அதிக பட்சம் 15 முதல் 20 எபிசோட்கள் வரை மட்டுமே கையில் வைத்திருப்பார்கள். படப்பிடிப்பு இல்லாவிட்டால் 3 வாரங்கள் வரை தாக்குப்பிடித்து கையில் இருக்கிற எபிசோட்களை ஒளிபரப்பலாம். அதற்குபிறகு கட்டாயம் படப்பிடிப்பை நடத்தியே ஆக வேண்டும்.
இந்த சூழ்நிலை இருப்பதால் பல சீரியல்கள் தற்போது வெளி மாநிலங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத்தில் கடுமையான விதிமுறைககளுடன் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. இதை தொடர்ந்து பல தமிழ் சீரியல்களின் படப்பிடிப்பு அங்கு தொடங்கி உள்ளது. நடிகர், நடிகைகள் அங்கேயே தங்க வைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.
தடுப்பூசி, கொரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பாதுகாப்புகளுக்கு இடையில் இந்த படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அங்கு விஜய் தொலைக்காட்சிக்கு தொழில்நுட்ப குழு இருப்பதால் நடிகர், நடிகைகள் மட்டும் அங்கு சென்று நடித்து வருகிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர் மற்றும் பாக்யலட்சுமி தொடரில் நடிக்கும் கலைஞர்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை தங்களின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள்.