ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கலசம் என்ற தொடரில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரித்திகா. பின்னர் நாதஸ்வரம், மாமியார் தேவை, வைதேகி, கல்யாண பரிசு 2 என பல தொடர்களில் நடித்தார் . அதோடு வெண்ணிலா கபடி குழு, வேங்கை, பாலு தம்பி மனசுல, பட்டாளம் போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு தொழிலதிபர் சனீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரித்திகா, இரண்டு ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு, மகராசி என்ற சீரியலில் ஹீரோவாக நடித்த எஸ்.எஸ்.ஆரின் பேரன் ஆரியன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார் ஸ்ரித்திகா. இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் அவரது வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு ஆரியன்- ஸ்ரித்திகா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்த வீடியோவை ஆரியன் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.