தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் |

ஜீ தமிழில் விரைவில் வெளியாக உள்ள நேரடி புதிய தொடர் 'வாரிசு'. இந்த தொடரில் ஜெய் எஸ்.கே. நாயகனாகவும், ஸ்வேதா நாயகியாகவும் நடிக்க இருக்கிறார்கள். தற்போது இதன் புரமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.
பிரமாண்ட ஜமீன் ராஜ்யத்தை கட்டி ஆள்கிறார் அதிகாரத் திமிர் பிடித்த ஜமீன் வாரிசு. ஆனால் அவரின் மகனோ குடி கும்மாளம் என்று ஊதாரித்தனமாக திரிகிறார். தனது ஜமீனையே கட்டி ஆளத் தகுதியான ஒரு மருமகளை தேடுகிறார் ஜமீன் ராணி. ஒரு ஏழைப்பெண் அந்த ஜமீனுக்கு மருமகளாக வருகிறாள். அவள் வந்த பிறகு ஜமீன் ராணி, கணவன், மனைவி இவர்களுக்கு இடையில் நடிக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இந்த தொடர் உருவாகிறது.