படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், குணச்சித்திர நடிகர் என அனைத்து பரிணாமங்களிலும் கலக்கியவர் பாண்டியராஜன். இயக்குநரான ஆரம்பகாலக்கட்டத்தில் கன்னி ராசி, ஆண்பாவம், நெத்தியடி என சில ஹிட் படங்களை கொடுத்தார். அதன் பின் எடுத்த படங்கள் பெரிய அளவில் ஹிட்டாக நிலையில், ஹீரோவாக களமிறங்கினார். தற்போது குணச்சித்திர நடிகராக சினிமாவில் நடித்து வரும் பாண்டியராஜன் கடந்த சில வருடங்களாகவே சீரியல்களிலும் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் பாக்கியலெட்சுமி, மாரி ஆகிய தொடர்களில் கெஸ்ட் ரோல்களில் நடித்திருந்த பாண்டியராஜன் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வீரா தொடரில் நீதிபதியாக நடித்துள்ளார். பாண்டியராஜனின் என்ட்ரி ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.