அல்லு அர்ஜுன் - அட்லீ படம் விரைவில் ஆரம்பம்? | அவசியம் வந்தால் நானே சொல்வேன் - மாதம்பட்டி ரங்கராஜ் | தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் டேவிட் வார்னர் | பிரியங்கா சோப்ராவின் 'தமிழன்' பட அனுபவம் பகிர்ந்த அம்மா | 'சப்தம்' படத்திற்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு | யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் |
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என தனது கேரியரை தொடங்கியவர் பாண்டியராஜன். ஹீரோ வாய்ப்புகள் குறைந்த பிறகு கேரக்டர் நடிகராக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ரியா என்றொரு அமானுஷ்ய படத்தில் கதாநாயகனாக மீண்டும் நடிக்க போகிறார் பாண்டியராஜன். இந்த படத்தில் அவருடன் முன்னாள் காமெடியன் செந்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கார்த்திக் சிவன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையாக உருவாகும் இந்த ரியா படத்தில் தினம் தினம் அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கும் பேய் பங்களாவின் உரிமையாளராக பாண்டியராஜன் நடிக்கிறார்.