2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒளிபரப்பாகி மக்கள் மனதிலும் தனியொரு இடத்தை பிடித்த தொடர் 'எதிர்நீச்சல்'. பாட்டி முதல் பாப்பா வரை ஒவ்வொரு கேரக்டரையும் செதுக்கி உருவாக்கப்பட்ட இந்த தொடர் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் நல்ல ரீச்சானது. ஆனால், தவிர்க்கமுடியாத சில காரணங்களால் எதிர்நீச்சல் தொடர் திடீரென முடித்து வைக்கப்பட்டது. இதனையடுத்து சீசன் 2விற்கான பணிகளும் அதுகுறித்த அறிவிப்பும் அப்போதே வெளியாகியிருந்த நிலையில், ஜனனியாக நடித்து வந்த மதுமிதா 'எதிர்நீச்சல் 2'வில் நடிக்க போவதில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது சீசன் 2விற்கான புரொமோ வெளியாகியுள்ளது. அதில், புதுபுது அர்த்தங்கள் உள்ளிட்ட சில தொடர்களின் மூலம் பிரபலமான வீஜே பார்வதி ஜனனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தெளிவாகிறது. புது ஜனனியை இப்போதே ரசிகர்களுக்கு பிடித்துவிட சீசன் 2வின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.