அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் | பிளாஷ்பேக்: வண்ணத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட சக்ர தாரி | 'தனுஷ் 55' படத்தின் கதை பற்றி அப்டேட் தந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தழகு தொடரில் கிராமத்து கதாநாயகியாக டிக் டாக் பிரபலம் ஷோபனா நடித்து வருகிறார். இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், ஷோபனாவுக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. இந்நிலையில், ஷோபனா அண்மையில் சென்னை திருவேற்காடு பகுதியில் காரில் சென்று கொண்டிருக்கும் போது, அந்த கிராமத்து பெண்கள் பலரும் ஷோபனாவின் காரை மறித்து அவரிடம் ஆனந்தமாக பேசியதுடன் ஷோபனாவின் நடிப்பையும் பாராட்டியுள்ளனர். இதன் வீடியோவை ஷோபனா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட இணையதள ரசிகர்களும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.