அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'பாண்டியன் ஸ்டோர்' தொடர் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 2018ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா தனுஷ், குமரன் தங்கராஜன், சித்ரா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சரவணன் விக்ரம், காயத்ரி, சாந்தி வில்லியம்ஸ் உள்பட பலர் நடித்திருந்தனர். 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் கடந்த வாரத்துடன் நிறைவடைந்தது.
கடந்த சில மாதங்களுக்கே முன்பே இதன் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கி விட்டது. இதுவரை 15 எபிசோட்கள் வரை படமாக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரண்டாம் பாகம் நேற்று முதல் ஒளிபரப்பாக தொடங்கியது. முதல் பாகத்தில் அண்ணன் தம்பி பாசம் பிரதானமாக இருந்தது. இந்த பாகத்தில் அப்பா மகன் பாசம் பிரதானமாக இருக்கும் என்று தெரிகிறது. இதனால்தான் 'தந்தைசொல் மிக்க மந்திரமில்லை' என்ற டேக்லைன் வைத்திருக்கிறார்கள்.
தந்தை கதாபாத்திரத்தில் ஸ்டாலின் நடிக்கிறார். அவருக்கு மனைவியாக நிரோஷா நடிக்கிறார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்த கூட்டுக்குடும்பத்தை சுற்றி இரண்டாம் பாகம் தொடர இருக்கிறது. திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.