இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

எதிர்நீச்சல் தொடரின் முக்கிய நடிகரான மாரிமுத்துவின் இழப்பு ரசிகர்கள் பலரையும் சோகமடைய செய்துள்ளது. எதிர்நீச்சல் தொடருக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த போதுதான் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து மாரிமுத்து நடித்த காட்சிகளில் அவருக்கு பதிலாக வேறொரு நபரை டப்பிங் பேச வைத்தனர். ஆனால், அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கார்டூன் குரல் போல் இருப்பதாக கிண்டலடித்தனர்.
இந்நிலையில், மாரிமுத்துவுக்காக டப்பிங் பேசிய வெங்கட் ஜனா மாரிமுத்துவுக்காக டப்பிங் பேச ரொம்பவே பயந்ததாக கூறியுள்ளார். அவர் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், 'மாரிமுத்து சார் அவர் இயக்கிய கண்ணும் கண்ணும் படத்தில் தான் முதன் முதலில் என்னை டப்பிங் பேச வைத்தார். இப்போது அவருக்காக டப்பிங் பேச வேண்டிய நிலைமை வந்துவிட்டது. மாரிமுத்து போலவே ரொம்ப கஷ்டமாக தான் இருந்தது. ரொம்பவே பயந்தேன். காரணம் குணசேகரன் கேரக்டர் ரொம்பவே ஸ்ட்ராங்கான கேரக்டர். அதில் நான் பேசி எதுவும் சொதப்பி விடக்கூடாது என பயந்தேன். அதன்பிறகு இயக்குநர் திருச்செல்வம் கொடுத்த தைரியத்தால் தான் பேசினேன். மாரிமுத்து விட்டு போனதை நான் முடித்து வைத்ததை போன்று ஒரு சின்ன நிம்மதி இருக்கிறது. இதுவே நான் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாக நினைக்கிறேன்' என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.