ஒவ்வொரு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளர்கள் பிரபலமாவார்கள். அந்தவகையில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பூஜா, பாடல் பாடி அசத்துவது மட்டுமில்லாமல் டீஜே பிளாக்குடனான காதல் டிராக்கிலும்(நிகழ்ச்சிக்காக மட்டும்) ரசிகர்களை என்டர்டெயின் செய்தார். அவர் நடிப்பு திறமையை பாராட்டி அப்போதே தமிழ் சினிமாவுக்கு புது ஹீரோயின் ரெடி என பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களை பார்த்துவிட்டு பூஜாவை சினிமாவில் நடிக்க சொல்லி ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.