Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

முதியோர்களுக்காக இலவச ஆம்புலன்ஸ்! பாலாவின் செயலால் நெகிழ்ச்சியடைந்த ரசிகர்கள்

03 ஜூலை, 2023 - 11:25 IST
எழுத்தின் அளவு:
Free-Ambulance-for-Seniors!-Fans-are-moved-by-Balas-act

விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா, தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் காமெடியனாகவும் ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விருது நிகழ்ச்சிகளில் ஆங்கரிங்கும் செய்ய வருகிறார். அவருக்கு தற்போது வெள்ளித்திரையில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் தேடி வருகிறது.

இந்நிலையில், தனக்கு சம்பளமாக கிடைக்கும் பணத்தில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வரும் பாலா, குழந்தைகளின் படிப்பு, முதியோர்களின் பராமரிப்பு என ஏகப்பட்ட நல்ல காரியங்களை செய்து வருகிறார். அந்த வரிசையில் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அவர் முதியோர் இல்லத்திற்காக புதிதாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார்.

அந்த ஆம்புலன்ஸ் முதியோர் இல்லத்தில் இருக்கும் வயதானவர்களுக்கு பரிசோதனை நேரங்களில் பயன்படும் என்றும், தவிர முதியோர் இல்லத்தை சுற்றி இருக்கும் வயதானவர்களுக்கும் இலவசமாக சேவை வழங்கும் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து இதுபோன்ற பல நல்ல விஷயங்களில் ஈடுபடும் பாலாவின் குணத்தை பலரும் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ப்ரேக்-அப் ஆனதை டான்ஸ் ஆடி கொண்டாடிய சாய் ப்ரியங்கா ரூத்!ப்ரேக்-அப் ஆனதை டான்ஸ் ஆடி கொண்டாடிய ... தவமாய் தவமிருந்து சீரியலில் எண்ட்ரி கொடுக்கும் வில்லி சிவன்யா! தவமாய் தவமிருந்து சீரியலில் எண்ட்ரி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)