அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து தொடரில் மலர் கதாபாத்திரத்தில் சந்தியாவும், பாண்டி கதாபாத்திரத்தில் ப்ரிட்டோ மனோவும் ஜோடியாக நடித்து வந்தனர். நிஜ வாழ்விலும் ஜோடியாக கமிட்டாகிவிட்ட இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விரைவில் திருமணமும் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடரிலிருந்து அடுத்தடுத்து சந்தியாவும், ப்ரிட்டோ மனோவும் வெளியேறிவுள்ளனர்.
இதில் ப்ரிட்டோ மனோவுக்கு பதிலாக நடிகர் சுதர்சனம் கமிட்டான நிலையில், மலர் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்ற கேள்வி நேயர்களிடம் நிலவி வந்தது. தற்போது, மலர் கதாபாத்திரத்தில் சந்தியாவுக்கு பதிலாக நடிகை சிவன்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவன்யா, 'செவ்வந்தி' தொடரில் வில்லியாக கலக்கி வருகிறார். எனவே, அவரது எண்ட்ரி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.