சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'நினைத்தாலே இனிக்கும்' தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் ஸ்வாதி சர்மா, அட்ஜெஸ்மெண்ட் டார்ச்சரால் தான் சென்னைக்கு ஷூட்டிங் வரவே பயந்ததாக கூறியுள்ளார். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவரான ஸ்வாதி சர்மா கன்னடத்தில் கண்டேயா கதே, துரோணா உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துள்ளார். ஆரம்ப காலக்கட்டத்தில் மாடலிங் செய்து கொண்டே நடிக்க வாய்ப்பு தேடி அலைந்த அவர், தன்னுடைய அம்மாவுடன் தான் ஆடிஷனுக்கு செல்வாராம். அப்படி ஒரு முறை ஆடிஷனுக்கு சென்ற போது அங்கிருந்த நபர் ஸ்வாதியின் அம்மா அருகிலிருக்கும் போதே அட்ஜெஸ்மெண்ட் செய்ய சொல்லி கேட்டுள்ளார். இதனையடுத்து ஸ்வாதியும் அவரது அம்மாவும் அந்த நபரை திட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டனர். இந்த காரணத்தினால் தான் 'நினைத்தாலே இனிக்கும்' ஷூட்டிங்கிற்காக சென்னை வரவே ஸ்வாதி பயந்ததாக கூறியுள்ளார்.




