ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

பிரபல நடிகரான ராகவ் ரங்கநாதன் செவ்வந்தி தொடரில் ஹீரோவாக நடித்து வந்தார். ஆனால், அந்த தொடரில் அவர் இறந்தது போல் காண்பிக்கப்பட்டு ராகவ் கதாபாத்திரத்திற்கு எண்ட் கார்டு போட்டுவிட்டனர். அதன்பின் எந்த ப்ராஜெக்டிலும் கமிட்டாகமல் இருந்த ராகவ் தற்போது மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கண்ணெதிரே தோன்றினாள்' சீரியலில் மாளவிகா அவினாஷ், ஸ்வேதா கெல்கே, ஜெயஸ்ரீ, ரேகா கிருஷ்ணப்பா, வடிவுக்கரசி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
தற்போது அந்த தொடரில் மேலும் சுவாரசியத்தை கூட்டும் வகையில், நடிகர் ராகவ் ரங்கநாதனும் முக்கிய கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். இதுகுறித்து பேசுகையில், 'கண்ணெதிரே தோன்றினாள் என்ற சூப்பர் ஹிட் தொடரில் இணைவதில் ஆவலாக உள்ளேன். நீண்டநாட்களுக்கு பிறகு மாளவிகா அவினாஷூடன் இணைந்து பணியாற்றுவதால் உற்சாகமாக இருக்கிறேன் ' என்று கூறியுள்ளார்.




