ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சின்னத்திரை இயக்குநர் ஓ.என்.ரத்னம் அழகு, வாணி ராணி போன்ற டிவி சீரியல்களை இயக்கினார். தற்போது ப்ரியமான தோழி, பாண்டவர் இல்லம் மற்றும் செவ்வந்தி ஆகிய ஹிட் தொடர்களை இயக்கி வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் ப்ரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட ஓ.என்.ரத்னம், தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், பொள்ளாச்சியில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்றுள்ள மகன்களை சென்னைக்கு அழைத்து வர ஓ.என்.ரத்னம் புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால், அதற்கு முன் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதாம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மகன்களை வீட்டிற்கு அழைத்து வந்த போது அங்கே அவரது மனைவி சடலமாக கிடந்துள்ளார். ரத்னத்திற்கும் ப்ரியாவுக்குமிடையே ஏற்பட்ட சண்டையில் மனமுடைந்த ப்ரியா, தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இயக்குநர் ஓ.என்.ரத்னத்தின் குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.