லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
சின்னத்திரை நடிகரான நவீன், கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான 'இதயத்தை திருடாதே', 'கண்ட நாள் முதல்' ஆகிய தொடர்களில் நடித்திருந்தார். அதன்பின் வேறு ப்ராஜெக்ட் எதிலும் அவர் கமிட்டாகியிருப்பதாக தெரியவில்லை. இதற்கிடையில், அண்மையில் புதிதாக டீக்கடை ஒன்றையும் தொடங்கி பிசினஸில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனால், அவர் இனி நடிக்கமாட்டாரா? என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், விரைவில் வெளியாகவிருக்கும் புஷ்பா 2 படத்தின் போஸ்டர் லுக்கை ரீ-கிரியேட் செய்து போட்டோஷூட் ஒன்றை நவீன் வெளியிட்டுள்ளார். வைரலாகி வரும் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் ஒருபுறம் குவிந்து வர, போஸ்டரில் 'மக்கள் நாயகன்' என நவீனுக்கு பட்டம் கொடுத்திருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.