ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழில் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி 70 நாட்களை கடந்துவிட்டது. 11 நபர்கள் எலிமினேட் ஆகியுள்ள நிலையில் பரபரப்பான இறுதிக்கட்டத்தை நோக்கி 10 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். இதில், சின்னத்திரையின் நம்பர் 1 நடிகையான ரச்சிதா மஹாலெட்சுமி தொடர்ந்து ஏதாவதொரு கதையை சொல்லி ரசிகர்களின் அனுதாபத்தை பெற்று வருகிறார். அந்த வகையில் ரச்சிதா தற்போது, தன் பெற்றோர்களே தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக கூறியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்றைய தினம் (டிச,20) வெளியாகியுள்ள பிக்பாஸ் புரோமோவில் சக ஹவுஸ்மேட்களுடன் பேசிக்கொண்டிருக்கும் ரச்சிதா, 'அப்பா டிரைவர், அம்மா படிக்காதவர். அவங்கள பார்த்து வளரும் போது நிறைய சண்டை மட்டும் தான் பார்த்துருக்கேன். பொண்ணு படிக்க மாட்டேங்கிறாளேன்னு சொல்லிட்டு நிறைய வாட்டி என் அம்மாவே என் கழுத்த நெரிச்சு நீ செத்துரு நீ செத்துருன்னு சொல்லுவாங்க' என சொல்லி கண்கலங்குகிறார். இந்த புரோமோ தற்போது வைரலாகி அதிக கவனம் ஈர்த்து வருகிறது.
முன்னதாக ரச்சிதா தனது திருமண வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையும் கணவருடனான பிரிவையும் குறித்து கூறியிருந்தார். தொடர்ந்து சமீபத்தில் கூட பெண் குழந்தையை தத்தெடுப்பேன் என கூறியிருந்தார். இவ்வாறாக பிக்பாஸ் வீட்டில் ரச்சிதா தொடர்ந்து தனது வாழ்வின் சோகக்கதைகளை கூற நேயர்களோ 'ரச்சிதாவுக்கு இவ்வளவு கொடுமை நடந்திருக்கா?' என அவருக்காக பரிதாபப்பட்டு வருகின்றனர்.