மடோனா, இவ்வளவு அழகாகப் பாடுவாரா ? | திருமணம் எப்போது? அதர்வா நச் பதில் | அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் : பிஸியாகும் நேரு ஸ்டேடியம் | கதை தயாராகாமல் அறிவிக்கப்பட்டதா விக்ரம் 64 ? | சென்ற வருடம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்', இந்த வருடம் 'லோகா' | சமூக ஊடகத்தில் கமெண்ட் என்ற பெயரில் மனநோயாளிகள் தாக்குகிறார்கள் : தங்கர்பச்சான் | '96' பிரேம்குமார் இயக்கத்தில் பஹத் பாசில் | ஜப்பானில் வெளியான 'வேட்டையன்' | கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? |
தொலைக்காட்சி செய்திவாசிப்பாளரான மோகன்ராஜ் தமிழின் பல சேனல்களிலும் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்துள்ளார். போலீஸாக வேண்டும் என்ற கனவோடு இருந்த அவருக்கு காவல்துறையில் பணி கிடைக்கவில்லை. இருப்பினும் போலீஸ் வேலையின் மீது தீராக்காதல் கொண்ட அவர் தற்போது தமிழ்நாடு காவல்துறையில் டிராபிக் வார்டனாக பணியில் சேர்ந்துள்ளார். கொரோனா காலக்கட்டத்திற்கு முன்பே இந்த வேலைக்காக அவர் அப்ளை செய்து காத்திருந்த நிலையில் தற்போது அவருக்கு டிராபிக் வார்டன் வேலை கிடைத்துள்ளது.
இந்த பணியில் இருப்பவர்கள் காக்கி உடை அணிந்து டிராபிக் போலீஸூடன் இணைந்து பணியாற்றலாம். மேலும், காவல்துறையினருடன் சேர்ந்து சாலை கட்டுப்பாட்டு விதிகள் உட்பட பல விழிப்புணர்வு பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளலாம். தற்போது 15 நாட்கள் இதற்காக பயிற்சி வகுப்பில் பங்குபெற்றுள்ள மோகன்ராஜ், அண்மையில் தனது கனவு ஒருவகையில் பலிதமானது குறித்து பேட்டியளித்துள்ளார்.
அப்போது அவர், 'இது சம்பளத்திற்காக செய்யும் வேலை இல்லை. சமூக அக்கறைக்காக செய்வது. இந்த வேலைக்கு காலம் நேரம் கட்டாயம் கிடையாது, குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் செய்யலாம். இந்த வேலையில் சேர்ந்திருப்பது பெருமையாக உள்ளது' என்று கூறியுள்ளார். நியூஸ் ரீடர் ஒருவர் திடீர் போலீஸாக மாறி பேட்டிக் கொடுத்திருக்கும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.