புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சின்னத்திரையில் 'கனா காணும் காலங்கள்' தொடரின் மூலம் அறிமுகமான பிளாக் பாண்டி, தொடர்ந்து வெள்ளித்திரையிலும் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர், உதவும் மனிதம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் மருத்துவம், கல்வி, ரத்ததானம் மற்றும் உணவு வழங்குதல் உள்ளிட்ட பல நற்பணிகளை கடந்த சில வருடங்களாக செய்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பொருளாதார சரிவில் சிக்கியுள்ள இலங்கை மற்றும் இலங்கை தமிழ் மக்களுக்கு இவர் தனது உதவும் மனிதம் அமைப்பின் வழியே சில உதவிகளை செய்தார். இதனால் பிளாக் பாண்டிக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. யாரிடம் அனுமதி பெற்று இலங்கைக்கு சென்றீர்கள்? என போலீஸ் தரப்பிலும், வருமானவரித்துறை தரப்பிலும் பிளாக் பாண்டியை விசாரித்து வருகின்றனர். மேலும், உதவும் மனிதம் டிரெஸ்டுக்கு வழங்கப்பட்ட 80ஜி வருமான வரி சலுகை ரத்து செய்யப்படும் எனவும் மிரட்டியுள்ளனர்.
இந்த சிக்கல் குறித்து பிளாக் பாண்டி, 'நான் மனிதாபிமான அடிப்படையில் தான் உதவ சென்றேன். இவ்வளவு சட்ட சிக்கல்கள் வரும் என்று தெரியாது. வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வருமானவரித்துறைக்கு உரிய விளக்கம் தரலாம் என்று இருக்கிறேன்' என கூறியுள்ளார். பிளாக் பாண்டியின் உதவும் குணம் இப்படி அவருக்கே பிரச்னையானதை நினைத்து பலரும் வருத்தப்பட்டு வருகின்றனர்.