சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் |
தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த், சிம்ரன், யோகி பாபு, ஊர்வசி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'அந்தகன்'. அப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நேற்று படத்தின் சக்சஸ் மீட் ஒன்றை நடத்தினார்கள்.
அப்போது பேசிய படத்தின் இயக்குனர் தியாகராஜன், “முதலில் இந்தத் திரைப்படத்தை தனிஒருவன் படத்தை இயக்கிய மோகன்ராஜா இயக்குவதாக இருந்தது. அவருடன் மூன்று மாதம் இணைந்து பயணித்தோம். அந்த மூன்று மாத காலத்திற்குள் அவர் லண்டனில் உள்ள வெளிநாட்டு நடிகை ஒருவர் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சொன்னார். அவருடனும் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர் கேட்ட சம்பளத்தையும் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டோம். மூன்று மாதத்திற்குப் பிறகு மோகன்ராஜாவிற்கு சிரஞ்சீவி நடிக்கும் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது, சிரஞ்சீவி உடனான படத்தை இயக்கி நிறைவு செய்த பிறகு இந்தப் படத்தில் பணியாற்றுகிறேன் என சொன்னார். நான் நன்றி என்று சொல்லிவிட்டு, உங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக தொடருங்கள் என்றேன். அதன் பிறகு நான் இயக்கத் தீர்மானித்தேன். அந்த கதாபாத்திரத்திற்கு யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து யோசிக்கத் தொடங்கினோம். அப்போது சிம்ரனைத் தவிர வேறு யாரும் என் எண்ணத்தில் வரவில்லை. அவரும் நடிக்க ஒப்புக்கொண்டு பெரிய அளவில் பேராதரவை வழங்கினார்,” என்றார்.
'அந்தகன்' படத்தை இயக்குவதைவிட்டு மோகன்ராஜா இயக்கச் சென்ற தெலுங்குப் படம் சிரஞ்சீவி நடித்து வெளிவந்த 'காட்பாதர்' படம். ஆனால், அப்படம் தெலுங்கில் தோல்வியைத் தழுவியது. மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த 'லூசிபர்' படத்தின் தெலுங்கு ரீமேக் தான் 'காட்பாதர்'. அந்தப் படத்திற்குப் பின் மோகன்ராஜா இயக்கத்தில் இன்னும் எந்தப் படமும் வரவில்லை. ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க உள்ள 'தனி ஒருவன் 2' படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை தற்போது செய்து வருகிறார் மோகன் ராஜா.