வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
2022ம் ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட படங்களுக்கான 70வது தேசிய விருதுகளுக்கான அறிவிப்புகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் தமிழ் சினிமாவிற்கு மொத்தமாக 6 விருதுகள் கிடைத்தன. ‛பொன்னியின் செல்வன் 1' படத்திற்கு 4 விருதுகளும், 'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு 2 விருதுகளும் கிடைத்தன.
தென்னிந்திய மொழிப் படங்களைப் பொறுத்தவரையில் தமிழுக்கு மேலே குறிப்பிட்ட 6 விருதுகள், மலையாளத்திற்கு சிறந்த திரைப்படம், சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த படத் தொகுப்பு, சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணிப் பாடகி என 5 விருதுகள், கன்னடத்திற்கு சிறந்த என்டர்டெயின்மென்ட் திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த சண்டைப் பயிற்சி, என 3 விருதுகள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் திரைப்படப் பிரிவுகளுக்கான விருதுகள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
மற்ற மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் சினிமா முன்னணியில் உள்ளது. தெலுங்குத் திரையுலகத்திற்கு இந்த தேசிய விருதுகள் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
70வது தேசிய விருதுகளுக்கான அனுப்பப்பட்ட படங்களில் தமிழிலிருந்து 4 படங்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவல் தெரிய வந்துள்ளது. 'பொன்னியின் செல்வன் 1, திருச்சிற்றம்பலம், கார்கி, லவ் டுடே' ஆகிய தயாரிப்பாளர்கள் மட்டும் தேசிய விருதுகளுக்கு தங்களது படங்களை பல்வேறு பிரிவுகளின் கீழ் அனுப்பி வைத்துள்ளனர்.
கொரானோ தாக்கம் 2020ம் ஆண்டு வந்த பின் தேசிய விருதுகள் அறிவிப்புகள் காலதாமதமாக வெளியாகி வருகின்றன. 2023ம் ஆண்டிற்கான தேசிய விருதகள் அறிவிப்பு இந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளதாம். இந்த 2024ம் ஆண்டிற்கான விருதுகள் பற்றிய அறிவிப்பை அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்களாம்.