பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
சமூக வலைதளங்கள், யூடியூப் தளம் ஆகியவை பிரபலமான பின் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் யாருடைய தாக்கம் அதில் அதிகமாக உள்ளது என்பது குறித்த போட்டி அதிகமானது. விஜய், அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் போட்டி என்றால் கூடவே ரஜினிகாந்தின் சீனியர் ரசிகர்களும் போட்டி போட்டு சண்டையிட ஆரம்பித்தனர்.
யூடியூப் தளத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற டீசர், டிரைலர் ஆகியவற்றில் விஜய் படங்களும், அஜித் படங்களும்தான் போட்டி போட்டு வருகின்றன. விஜய் பட டிரைலர்களைப் பொறுத்தவரையில் அதிக பார்வைகளைப் பெற்ற டிரைலர் என்ற சாதனையை 'லியோ' படம் வைத்துள்ளது.
24 மணி நேர சாதனையில் அப்படத்தின் டிரைலர் 32 மில்லியன் பார்வைகளைப் பெற்று தமிழ் சினிமா டிரைலர்களின் சாதனையில் முதலிடத்தில் உள்ளது. 'லியோ' டிரைலர் கடந்த வருடம் அக்டோபர் 5ம் தேதி வெளியானது. சுமார் பத்து மாத இடைவெளிக்குப் பிறகு விஜய் படம் ஒன்றின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது..
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் இசையமைப்பில், விஜய் நாயகனாக நடிக்கும் 'தி கோட்' இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. முந்தைய சாதனையான 'லியோ' பட டிரைலரின் சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைக்குமா என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.