பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட நடிகை ரோஜாவும் நகரி தொகுதியில் தோல்வி அடைந்தார். ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் நடிகை ரோஜா விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டி நடத்த ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் பெரிய அளவில் ஊழல் நடந்ததாக அப்போதே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டி நடத்தியதில் ரோஜா ரூ.100 கோடி ஊழல் செய்ததாக விளையாட்டு அமைப்பு தலைவர் பிரசாத் மாநில அரசுக்கு கடந்த ஜூன் 11ம் தேதி புகார் மனு அனுப்பினார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த விஜயவாடா போலீஸ் கமிஷனருக்கு அரசு உத்தரவிட்டது.
தற்போது இந்த விசாரணை தொடங்கி உள்ளது. இதை தொடர்ந்து ரோஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் ரோஜா கைதாகும் வாய்ப்புள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. முதல் கட்டமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ரோஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட இருப்பதாக தெரிகிறது.